ஆசிரியர் திலகம்
தமிழ்நாட்டின் மைய நகரான திருச்சியில் சர்வபள்ளி என்னும் ஊரில் 1888 ஆம் ஆண்டு 5ந் திகதி புரட்டாதி மாதம் பிறந்தவர் ஆசிரியர் திலகமாகத் திகழும் இராதா கிருஷ்ணன் , இவரது பிறந்த நாளை இந்திய அரசு ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடுகிறது.
ஆசிரியராக சேவை வாழ்வை தொடங்கி இந்தியாவின் குடியரசுத் தலைவரானவர் இராதா கிருஷ்ணன் , இவரது தந்தையார் பெயர் வீராசாமி. இவர் சொந்தஊரான சர்வபள்ளியிலும், திருத்தணியிலும் பள்ளிப் படிப்பை முடித்தார். வேலூர் ஊரிஸ் கல்லூரியில் எப்.ஏ. தேர்ச்சி பெற்றார். தொடர்ந்து சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் தத்துவப் பிரிவில் எம்.ஏ. பட்டமும், சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் எல்.டி. பட்டமும் பெற்றார்.

இவர் சென்னை மாநிலக் கல்லூரி (1908 - 1917), மைசூர் மன்னர் கல்லூரி (1918 - 1921), கல்கத்தா பல்கலைக் கழகம் ஆகியவற்றில் தர்க்கவியல், தத்துவம் என்னும் துறைகளில் பேராசிரியராகப் பணியாற்றினார். ஆந்திரப் பல்கலைக் கழகம் (1931 - 1939), காசி இந்துப் பல்கலைக் கழகம் ஆகியவற்றின் துணைவேந்தராகவும், இந்திய சாகித்திய அகாடமித் தலைவராகவும் பணியாற்றினார்.
ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தில் கீழை நாடுகளின் சமய அறிவியல் துறையில் சிறப்புப் பேராசிரியராகவும் இவர் பணியாற்றியுள்ளார். இவர் தத்துவம், சமயம் தொடர்பான கட்டுரைகள் எழுதியும் சொற்பொழிவுகள் நிகழ்த்தியும் உலகப் புகழ் பெற்றார்.
இராதாகிருஷ்ணன் இந்திய விடுதலைப் போராட்டத்தில் நேரடியாகப் பங்கு கொள்ளாவிட்டாலும், போராட்டத் தலைவர்களுடன் நெருங்கிய தொடர்புகொண்டு, அவர்களுக்கு பக்கத்துணையாக இருந்தார். எனவே, இந்தியா விடுதலைப் பெற்றதும் பல்வேறு துறைகளில் இவரை பயன்படுத்திக் கொண்டனர். 1950 முதல் 1953 வரை ரஷ்யாவிற்கான இந்தியத் தூதராக நியமிக்கப்பட்டார். 1962 வரை இந்தியாவின் முதல் துணை குடியரசுத் தலைவராகவும், 1962 முதல் 1967 வரை இந்தியாவின் இரண்டாம் குடியரசுத் தலைவராகவும் பதவி வகித்தார்.
வேதாந்த அறிவியல், இரவீந்திரநாத் தாகூர் தத்துவம், நம் காலத் தத்துவத்தில் சமயத்தின் ஆட்சி, உபநிடதத் தத்துவம், இந்தியத் தத்துவம், இந்து சமய வாழ்க்கை நோக்கு, சமயத்தில் மேலை கீழை நாடுகளின் பங்கு, இன்றைய இந்தியத் தத்துவம், மகாத்மா காந்தியடிகள், கீழை நாட்டுக் கோட்பாடுகளும் இந்தியாவும் சீனாவும், கல்வி-அரசியல்-போர், சமயமும் சமூகமும், பகவத் கீதை, தம்மபதம், முதன்மை உபநிடதங்கள், பிரம்ம சூத்திரங்கள், மாறிவரும் உலகில் சமயத்தின் பங்கு ஆகிய நூல்கள் இவர் எழுதிப் புகழ் பெற்றவை. 1975 ஆம் ஆண்டு 17ந் திகதி சித்திரை மாதம் சென்னையில் காலமானார்.
ம.இரமேசு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக