உயிர்காப்பான் தோழன் .
அமுதகத்தில் ஒரு வீட்டில் - அம்மா நோயினால் இறந்துவிட தந்தையுடன் 5 வயதிலிருந்து வளர்ந்தான் அழகிய தமிழன் அவன் வீட்டின் ராஜமகன் ஒரேஒரு பிள்ளை
தந்தை தன்னையே அவன்மீது வைத்தார் பூக்கள் மலர்வதை அவர் பார்த்ததில்லை தன்
மகன் விழி விழிக்கும் நாளெல்லாம் கண்டு மகிழ்ந்தார் கண்ணே ராசா கட்டிக்கரும்பே
என்று நெஞ்சில் வைத்து பாராட்டி போற்றி மகிழ்ந்தார் எல்லா வசதிகளும் கொண்ட
கோடீஸ்வர வீட்டு மகன் ஒருநாள் ஊரார் பசிக்கின்றது என்று கதவைத் தட்ட காளையவன்
கண்ணோடினான் ஏழைகள் பூவானார்கள் - செல்லக் கிளி பள்ளியிலே செவந்திப்பூ தொட்டிலிலே
என்று பாடி மகிழ்ந்தார் திருவாளர் ராஜகுமாரன் , சொப்ஜியா அந்த வீட்டின் சமையற்காரப்
பெண் நண்பர்களுடன் களித்துவிட்டு நடுநிசி தாண்டி வந்து ராஜா பாயாசம் தா என்றாலும்
25 நிமிடத்தில் பாயாசம் வைத்துக்கொடுக்கும் இனிய சமையலாளி ராஜா தன் வீட்டில்
ஒவ்வொரு உணவையும் ஒவ்வொரு தட்டில் உண்பான் சுத்தம் அவன் உயிராகப் பேணும்
ஒன்று ஒருநாள் தன் நண்பன் பராவுடன் உணவருந்திக்கொண்டிருக்கையில் திடீரென
பரா பியைந்த மா அவன் மடியில் வீழ்ந்தது அதை சிரித்துக்கொண்டே எடுத்துக் கொடுக்க
மிகுந்த அவமானமும் வெட்கமும் அடைந்தபடி கையை நீட்டினான் பரா
வாங்குவதற்கு உடனே ராஜா பராவை ஏமாற்றிவிட்டு அவனது எச்சில் மாவை உண்டு மகிழ்ந்தான்
இதைப் பார்த்த சொப்ஜி திகைத்தாள் , நட்பில் அசுத்தம் பாராத நெஞ்சம் ராஜாவுக்கு
நாதன் ராஜாவை வைத்து தான் உயரக் கங்கணம் கட்டிய நாகம் ராஜாவை தவறான
பாதைக்கு அழைத்துச் செல்ல முயன்றான் மதுவுக்கும் மாதுக்கும் போதைக்கும் அடிமையாக்கி
ராஜாவை வளைத்து பணம் கறப்பதே நாதன் நோக்கம் இதை பரா கண்டுகொண்டு
ராஜாவிடம் உண்மையை எடுத்துக்கூறினான் ராஜா பாராவை அடித்து கலைத்துவிட்டு
நாதனின் நஞ்சை மோகித்தான் - செல்வபுரம் சென்று நாதனுடன் ஒரு பொதுமகள்
வீட்டுக்கு சென்றான் அவள் விலைமகள் குடும்பத்தில் பிறந்த போதும் இன்னும்
யாருடனும் உடலைப் பகிராத பாவை அவளின் ஆட்டத்திலும் பண்பிலும்
தன்னை மறந்த ராஜா அவளை மோகித்தான், இதையறிந்த தந்தை
ஆட்களை வைத்து ஆடகி சித்ராவையும் குடும்பத்தையும் கொலை செய்ய
திட்டம் போட்டார் தன் மகனை அழைத்துக் கண்டித்தார் ராஜாவோ விடாப்பிடியாக
அவளையே மணப்பேன் என்று இருந்தான் மகன் மீதுள்ள பாசத்தால் ராஜகுமாரன்
சம்மதித்தார் கல்யாணமான பின் அவளை மேலோகம் அனுப்புதலே அவரின்
திட்டம் அதற்கான வழிகள் செய்து முடித்தார் இங்கே ஒரு திரும்பல்
ராஜகுமாரன் வீம ராஜாவின் இளைய புதல்வன் வீமாவுக்கு 7 பிள்ளைகள்
ஆனாலும் தன்னை இன்னும் இளமையானவன் என்று நிரூபிக்கப் பிறந்த கடைசிப் பிள்ளை
ராஜகுமாரன் மீதே அளவுகடந்த பிரியமாகவிருந்தார் வீமா ஒரு கட்டத்தில் நாதனின் தந்தையை
அவமதித்து தண்டித்ததால் வீமா குடும்பத்தை கருவறுக்கவேண்டும் வேண்டும் என்ற
எண்ணத்தில் வளர்க்கப்பட்டவனே நாதன் சிலாவி என்ற இடத்துக்கு வியாபார நோக்கமாக
ராஜகுமாரன் சென்றிருந்த வேளை ஒரு மாலையில் மகிழ்வுக்கு சென்ற நடனவாலையில்
கிடைத்தவளே மாதவி அவளின் அழகில் மயங்கி உறங்கியவரே ராஜகுமாரன்
பின் அவர்கள் சேர்ந்து வாழ்ந்து மகிழ்ந்து அவள் நோயில் வெந்து நொந்து இறந்தது
சோகம். மாதவி கோடீஸ்வரி அவளின் இறப்புக்கு பின் அவளின் செல்வங்கள் அனைத்தும்
ராஜகுமாரனுக்கே சேர்ந்தது காரணம் அவள் வீட்டின் தனிப்புதல்வி
ராஜா தந்தையின் நரிவேடம் கண்டுவிட்டான் நாதன் நாவாடி நலமுரைத்தான் ராஜாவுக்கு இதனால்
நாதனுக்கு பெருஞ் செல்வம் கிட்டியது ராஜாவால் - தந்தையிடம் தன் நெஞ்சம் திறந்தான்
ராஜா என் மனைவிக்கு ஒன்றென்றால் நானும் உயிர் திறப்பேன் என்றான் ராஜா
பிள்ளைமீது உயிரையே வைத்திருந்த ராஜகுமாரன் தன் திட்டத்தைப் பின் வாங்கினார்
அவரின் மாறுதல் அடியாட்களுக்கு தெரியாததனால் அவர்கள் ஒருநாள்
ராஜாவுடன் காரில் சென்ற அவன் மனைவியை சுட்டுவிட்டார்கள்
அதில் தப்பி சித்ரா உயிர்பிழைத்தாள் தந்தை தன்னை ஏமாற்றிவிட்டார் என்ற ஆத்திரத்துடன்
அவரின் இருப்பிடம் சென்ற ராஜா அவரிடம் தற்கித்தான் தனது உண்மை விடயங்களைச்
சொல்லித் தவறுக்கு வருந்தினார் ராஜகுமாரன் சமாதானம் அடைந்தான் ராஜா
எல்லோரும் சேர்ந்து கோயிலுக்குபுறப்பட்டார்கள் வழியில் காரை மடக்கி
நாதனின் ஆட்கள் கடத்துகின்றார்கள் ஒரு தீவில் வைத்து ராஜகுமாரனின் அனைத்துச்
சொத்துக்களையும் எழுதித்தரவேண்டும் என்று கேட்கப்படுகின்றது (நாதனின் ஆட்களால் )
நாதன் நல்லவன் போலே நடித்துக்கொண்டே இத்தனையும் செய்கின்றான்
நண்பன் ஜேம்ஸ் மூலம் பரா இந்த அவலத்தை அறிந்து காவலர்கள் உதவியை நாடி
தீவில் வைக்கப்பட்ட அனைவரையும் காப்பாற்றுகின்றான் - நாதன் கைதாகின்றான்
கொடியவனை நம்பி நல்லவனை வெறுத்த அறியாமை நினைந்து
ராஜா பாராவைப் பார்த்து தலைகுனிகின்றான் பரா கட்டிப்பிடித்து
உண்மை நட்புக்கு சிகரம் ஏற்றுகின்றான் , உயிர்காப்பான் தோழன் .
முற்றும்
ம.இரமேசு
(கற்பனை )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக