ஆழியின் பேரலையிலும் நீண்டது பேரழகியின் காந்தக்கண்ணிலும் கவர்ச்சியிலும் ஈர்ப்புமிக்கது , உலக இன்பத்தின் உச்சி பூமியில் சூதாட்டம். இதற்கு மிஞ்சிய ஒரு களியாட்டம் கிடையாது இதற்கு மிஞ்சி வாழ்வில் துன்பமும் கிடையாது. சொத்துக்கள் யாவற்றையும் இழக்க வைக்கும் சொத்தில்லாதவனை குபேரனுமாக்கும் , அவமானம் உண்டாக்கும் பொய் சொல்ல வைக்கும் திருடவும் வழிவகுக்கும் அத்தனை இழிவுக்கும் காரணமாக்கும், ஒரு கொடிய கூத்து அதை நாடினால் அதிலிருந்து மீள்வது மிக மிக கடினம் .
வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதுவும்
தூண்டிற்பொன் மீன்விழுங்கி யற்று ( 931 குறள் )
சிறுமைபல செய்து சீரழிக்கும் சூதின்
வறுமை தருவதொன்று இல் ( 934 )
ம.இரமேசு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக