புதன், 24 செப்டம்பர், 2014

வழுக்கையாறே  வழுக்கையாறே
வளைந்தோடும்  வடிவான வழுக்கையாறே
யாழ்மண்ணில்  யமுனையாக  ஓடுகின்ற ஓராறே
 யாழ்ப்பாணத்தின்  ஒரேயொரு தனியாறே
வண்ண வயல்கள்  ஊடே   ஊரு மாறே
வாடைக்காற்றை முகர்ந்தோடு மாறே
அராலி மண்ணை  அழகாக்கும்  அன்பாறே
மண்ணின்  அழகைக்  கட்டியணைக்கும் நல்லாறே
இல்லை  இனிப்பஞ்சம்  நீயே தஞ்சம்

ம.இரமேசு

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக