அம்மா துணை.
இல்லாமை இல்லாதொழிந்து
இனமதபேதமின்றி எல்லோரும்
இன்புற்று ஒருமித்து இருந்திட
கனா என் கண்களிலே....!
உங்கள் ஆக்கம் இல்லை கனவு
நன்று நன்று.
ஒன்று நின்று என்னை
மென்று கொன்று கேட்குதே
என்னவாம் ?
கண்ணு சாதி பேதம் என்னாயிற்று
அது இருக்கலாமா கண்ணு .
பேதங்களில் மிக மிக மோசமான
பேதம் சொந்த இனத்துக்குள்
சாதி பேதம் பார்க்கும் இழிகுணம்
என்கின்றார் மேதை அம்பேத்கார் .
எல்லோர் கவடுகளும் நாறிடுமே
சுத்தமதை செய்யாங்கால்
கீழானவன் என்பவனும்
குளிக்கின்றான் கழுவுகின்றான்
மேலானவன் என்பவனும் ?
சோறும் கறியும் காய்ச்சி தின்றே
சுந்தரத்தமிழில் பேசி கிருமி
பிடித்து சாகாது இன்றும்
நம்முடனே வாழ்கின்றான்
கீழ்சாதி என்பவனுந்தான்
90 வயதினையும் எட்டிவிட்டான்
எதுவுமவனை தீண்டவில்லை
எமனும் இன்னும் இறங்கவில்லை
விளக்கும் இன்னும் அணையவில்லை
வீணரும் பக்குவமடையவில்லை
அரை வேக்காட்டு பயல்காணும்
அநியாய அருவருப்பு
உடல்வருத்தி உழைக்கும்
மாந்தர் மனமுடைக்கின்றதை
அறியாயோ உணராயோ
இல்லாமை இல்லாதொழிந்து
இனமதபேதமின்றி எல்லோரும்
இன்புற்று ஒருமித்து இருந்திட
கனா என் கண்களிலே....!
உங்கள் ஆக்கம் இல்லை கனவு
நன்று நன்று.
ஒன்று நின்று என்னை
மென்று கொன்று கேட்குதே
என்னவாம் ?
கண்ணு சாதி பேதம் என்னாயிற்று
அது இருக்கலாமா கண்ணு .
பேதங்களில் மிக மிக மோசமான
பேதம் சொந்த இனத்துக்குள்
சாதி பேதம் பார்க்கும் இழிகுணம்
என்கின்றார் மேதை அம்பேத்கார் .
எல்லோர் கவடுகளும் நாறிடுமே
சுத்தமதை செய்யாங்கால்
கீழானவன் என்பவனும்
குளிக்கின்றான் கழுவுகின்றான்
மேலானவன் என்பவனும் ?
சோறும் கறியும் காய்ச்சி தின்றே
சுந்தரத்தமிழில் பேசி கிருமி
பிடித்து சாகாது இன்றும்
நம்முடனே வாழ்கின்றான்
கீழ்சாதி என்பவனுந்தான்
90 வயதினையும் எட்டிவிட்டான்
எதுவுமவனை தீண்டவில்லை
எமனும் இன்னும் இறங்கவில்லை
விளக்கும் இன்னும் அணையவில்லை
வீணரும் பக்குவமடையவில்லை
அரை வேக்காட்டு பயல்காணும்
அநியாய அருவருப்பு
உடல்வருத்தி உழைக்கும்
மாந்தர் மனமுடைக்கின்றதை
அறியாயோ உணராயோ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக