வெள்ளி, 19 செப்டம்பர், 2014

அதை  நினைத்தால்  நிம்மதி

நெருப்பும்  ஏக்கமும் நீர்மையும்  உள்ளே  வைத்து  வளரவிட்டான்
குழவியாக இருக்கையிலே  வயிறு சம்பந்தமாகவே  அழுகை
வளர்ந்த பின்னோ  நிறைய விடயங்களுக்கு  அழுகை
நாலுபேர்  மதிக்க  வாழ்  என்பதும்  காசை  அத்திவாரமாகக்  கொண்டே
சொல்லும் சொல் - எத்தனை  அறிவாளியாகவிருந்தென்ன
காசு இல்லையென்றால்  மதிப்பு  மரியாதை இல்லை.
அறிவின் கரைகளை  அடைத்து  தம்மை  கோபுரமாக்கியவர்களே  காசைக்  கருதாது
அறிந்தவரின்  மேன்மையைப்   போற்றுவர்.
நம்மை நாம்  சமாதானம் செய்யச்  சொல்லும் வார்த்தைகளும்  கூத்தாட்டு  அவைக்குழாமே
நிஷாத  குணத்துக்கு மனிதன்  மறுமலர்ச்சி இன்னும்  கொடுக்கவில்லை
ஒரே ஒரு   மகிழ்வு  பாதகச்  செயல்களில் ஈடுபடாது  பண்புடன்  வாழும்  அறிவைக்கொண்டதும்
பாதகச்  சூழல்களில்  மாட்டி  நோவு பாடாததுமே  இப்போதைக்கு வாழ்நாளின் பெரும் பயன்
அதை  நினைத்தால்  நிம்மதி

ம.இரமேசு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக