திங்கள், 29 செப்டம்பர், 2014

குருசேத்திரத்தில்  கர்ணன்

அர்ஜுனனனுக்கு  நேராக  அம்பைவைத்து   குறிபார்க்கின்றான்  கர்ணன் 
மறுபக்கம்   அர்ஜுனன்  எனது  சொந்தங்களுடன்  எப்படிக் கண்ணா
யுத்தம் செய்வேன்   என்னை  ஆளாக்கிய  பெரியோர்கள்  முன்னால்
நிற்கின்றார்களே   இதென்ன  விளையாட்டு  என்னால்  முடியாது
என்கின்றான்  கண்ணனின்  உபதேசம் (அறிவுரை) தொடங்குகிறது
ஆனால்  கர்ணனுக்கு  நன்றாகத் தெரியும்  அர்ஜுனனும்  மற்றவர்களும்
தனது  சகோதரர்கள் என்று  ஆனால்  தனது  நன்றிக் கடனுக்காக
அவன்  யுத்தம் செய்ய  வீறுகொள்கின்றான்  சற்றும்  சிந்திக்கவில்லை
எனது சொந்தங்கள் என்று  ஆக  கண்ணனின்  உபதேசத்தை  சரியாகக்
கருத்தில்  கொண்டிருந்தான்  கர்ணன்  .

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக