அமைதித் திரை
அப்ஸ் எல்லோரையும் தனது உறவாக நினைந்து வாழ்கின்றான் ஊரிலே ஓரளவு கல்வித்தராதரம்
பெற்றவன் அட்வான்ஸ் லெவல் வரை படித்தவன் நல்ல பழக்க வழக்கங்கள் தெரிந்தவன் ஆயினும்
சில தவறுகளை அறியாமல் செய்கின்றான் பின்னர் சிந்தித்து தனது செயல்களுக்கு வெட்கப்பட்டு
ஒழுங்காக நடக்கின்றான் சிறந்த விளையாட்டு வீரனாகவும் விளங்குகின்றான் தனது திறமையினால்
அந்நாட்டின் மொழியினை நன்றாகப் பயின்று ஒரு வேலையில் சேர்கின்றான் ஆயிரம் கூத்தாடினாலும் தனது குடும்பத்துக்கு (பெற்றோர்கள் சகோதரர்கள்) செய்ய வேண்டிய கடமையினை மறவாது ஒழுங்காகச் செய்கின்றான் .
அந்தச் சிறிய அறையிலே பெரிய மனதுடன் வாழும் அப்ஸ் எப்பொழுதும் மனிதர்களை வரவேற்பதிலும் உபசரிப்பதிலும் தனது செல்வத்தை கரைக்கின்றான் மொத்தத்தில் இழிச்சவாயனாகவே கள்ளம் கபடம் அறியாத வாழ்வை வாழ்ந்து வருகையில் அவனது நண்பன் ஜெப்ஸ் ஒருநாள் அவனை தனது அறைக்குவரும்படி அழைக்க அங்கே சென்று நண்பனுக்காக நண்பனின் எதிரிகளால் காயம் படுகின்றான் அப்ஸ் - அப்சின் நண்பன் நிப்சுடன் கொண்டிருந்த ஒரு பகையே அப்சுக்கு நோபடக் காரணமானது - ஒரு விளையாட்டு போட்டியில் நிப்ஸ் பொறாமையால் அப்சையும் முறைத்ததுண்டு திமிராய் நடந்தவன் , நிப்ஸ் ஒரு ரவுடி கூட்டத்தை கொண்டிருந்த அறிவிலி, அப்ஸ் காயம்பட்டிருந்த வேளை அந்த நகரில் வாழ்ந்த ஒரே ஒருவர் தவிர அவனை ஆதரிக்க வேறு யாரும் சென்றதில்லை. எவரெல்லாம் அப்சிடம் மகிழ்ந்தார்களோ அவர்களே அவனை தாக்கினார்கள் அப்ஸ் காயம்பட்ட செய்தி அமேரியில் வாழும் பிசா வரை செல்லவே பிசா தனது நண்பருக்கு அப்சை பார்த்து வரும்படி சொல்கின்றார் பிசாவின் நண்பர் நிர் சிறிய துப்பாக்கியை எடுத்து ஜாக்கட்டில் மறைத்துக்கொண்டு அப்ஸ் வீட்டுக்கு சென்று அப்சின் நிலைகண்டு வேதனைப்படுகின்றார் இவ்வளவு நல்லவனாகிய உன்னை யார் காயப்படுத்தினார்கள் ஏன் எதற்கு என்று விபரம் கேட்டு விட்டு, வா வந்து உன்னை அடித்தவர்களைக் காட்டு அவர்களைச் சுடுகின்றேன் என்றார் நிர் . இல்லை வேண்டாம் ஏதோ தெரியாத்தனமாக அவர்கள் செய்துவிட்டார்கள் விடுங்கள் என்று நிர்ருக்கு எடுத்துச் சொல்லி பழிவாங்கும் இழிசெயலைச் செய்யாது நிர்ரை சமாதானமாக்கினான் அப்ஸ் .
பிசா அப்ஸ் வாழ்ந்த நகரில் வாழ்ந்து ஒரு புகலிடமில்லா நிலைமையில் ஒருவருடமாக அப்சால் ஆதரிக்கப்பட்ட இந்து நாட்டவர் அப்ஸ் மீது பெருமதிப்பு வைத்திருக்கும் நல்லவர். பசித்த பறவைகள் இரை கொள்ளும் குளமாக அப்சின் வீடு இருந்தது அவனிடம் சென்று கை நனையாதோரை விரல்விட்டு எண்ணிவிடலாம் கால நேரம் பாராது உபசரிக்கும் அமுத சுரபியாக அப்சின் உள்ளமிருந்தது பொய் சொல்லத் தெரியாத வெளிப்படையான மனிதன் அப்ஸ் காசை சேர்க்கத் தெரியாதவன் அதனால் அவனை கருமிகளுக்கு பிடிப்பதில்லை ஆனால் அவன் கொடுப்பதை மட்டும் வாங்கி ருசிப்பார்கள் அக்கருமிகள் பின் அவனைப்பற்றி புறம்பேசுவார்கள் .
அப்சை விரும்பி ஒருத்தி அவன் வாழ்வில் இணைகின்றாள் சில ஆண்டுகள் அவனுடன் வாழ்ந்த அவள் திடீரென ஒருநாள் நடைபாதையில் மயங்கி விழ அவள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதிக்கப்படுகின்றாள் அவளுக்கு ஒரு பொல்லாத நோய் குடிகொண்டிருக்கின்றது இன்னும் சில காலமே வாழமுடியும் என்று வைத்தியர் அப்சிடம் சொல்ல அப்சின் கண்களிலிருந்து தூறல் கிளம்பியது. சிறிது காலம் அப்ஸ் தனது காதலியை மகிழ்வாக
எல்லா இடமும் கூட்டிச் சென்று மகிழ வைத்தான், ஒருநாள் குளியலறைக்கு சென்றவளை அங்கே வந்து இயமன் கவர்ந்து சென்றான் , அதுமுதல் அப்ஸ் மதுவின்பால் தனது நோவுக்கு
மருந்தைத் தேடி ஒரு பைத்தியம் பிடித்த நிலையிலேயே வாழ்ந்தான் அவனை ஒரு சில பண்பாளர்கள் தவிர பெருவாரியானோர் மனிதனாகவே காணத்தவறினார்கள் உண்மையில் அப்சே
நல்ல மனிதனாக இருந்தான் மற்றவர்கள் மனிதம் தொலைத்து பணத்துக்கும் பகட்டுக்குமே அடிமையாகி வாழ்ந்தார்கள் அவர்கள் வாழ்வில் அன்பு உபசரிப்பு இரக்கம் எல்லாம் தூரவே நின்றன
குப்ஸ் இங்கு கிடைப்பதை காட்டிலும் கனடா சென்றால் இன்னும் அதிகமாகா உழைக்கலாம் என்று அங்கு சென்றான் இக்கரைக்கு அக்கரையும் பச்சையென தெரியவர ஓடோடி
மீண்டும் இக்கரைக்கே வந்து நொந்து நொந்து அழுமூஞ்சியாக வாழ்ந்தான் அவனுக்கு எத்தனை கோடி செல்வம் இருந்தாலும் நெஞ்சில் மகிழ்வு வருவதில்லை சலிப்பே என்றும் அவன் பேச்சில் நிலவும்.
நல்லபடி காப்பான் என்று ஒருத்தியை கட்டி வைக்க அவளும் அவனுடன் சேர்ந்து சரியாக ஆக்கி
உண்ண முடியாமல் வாழ்ந்து ஒரு பிள்ளையை பெற்று அதற்கு தகுந்த போசாக்கை கொடுக்க குப்ஸ் செலவளிக்காததனால் அக்குழவி டாட்டா காட்டி சென்றுவிட்டது - குப்சுக்கு மேடைகளில் ஏறி தன்னை பிரபலப்படுத்த பெரும் ஆசை. சொந்தமாக ஒரு மைக் செட்டை வாங்கி வைத்துக்கொண்டு நகரில் நடைபெறும் அத்தனை நிகழ்வுகளிலும் தலை காட்டினான்
அவனது அறுவைத் தமிழை பார்வையாளர்கள் சலித்துக்கொண்டனர் மேடைக்குரிய நாகரிகத்
தமிழ் பேசத் தெரியாத ஆளாகா குப்ஸ் நெழிந்தான்.
அப்ஸ் மிகுந்த நோய்கண்டு கண்டு பற்களும் விழுந்து கட்டு பற்களுடன் நகரசபை கொடுத்த
அதிவிசேட குடியிருப்பின் மூன்றாம் மாடியில் வாழ்ந்தான் மதுவே அவனது உணவாகவிருந்தது
வைத்தியர் குடிக்காதே என்று எடுத்துச் சொல்லியும் அவனால் மதுவிடமிருந்து பிரியாவிடை பெற முடியவில்லை - ஒருநாள் அவன்மீது சற்று அக்கறை கொண்ட பெரியவர் ஒருவர் அவனிடம் வந்து குசலம் விசாரித்துவிட்டு சொன்னார் தம்பி வருகிற சனியன்று ஒரு விழா நடக்கவிருக்கின்றது நீ என்னுடன் வருகின்றாய் என்றார் , இல்லை இல்லை நான் வரமாட்டேன் எனக்கு நம்மவர்களின் ஊளை பிடிப்பதில்லை என்றுவிட்டு தான் தனது இனத்தவரிடம் கண்ட வேதனைக்குரிய விடயங்களை கொட்டித் தீர்த்தான் சரிடா தம்பி எதுக்கும் என்னுடன் வா, நானே உன்னை எனது காரில் அழைத்துச் செல்கின்றேன் என்றுவிட்டு அந்தப் பெரியவர் சென்றுவிட்டார் - அப்ஸ் தனக்குள் ...... வாழ்வில் சந்தித்த பொய்யான மனிதர்களை நினைத்து அழுது புலம்பினான் ஆத்திரப்பட்டான் , சனியும் வந்தது அந்தச்சனியே அவனுக்கு கடைசிச் சனியென்று அவன் நினைத்திருக்க வாய்ப்பில்லை பெரியவரின் வேண்டுதலுக்காய் சென்றவன் பின்னால் நின்றபடி மறைவாக ஜாக்கட்டில் இருந்து எடுத்துச் சென்ற மதுவைக் குடித்தான் மயங்கிய சோர்வுடன் சுவரில் சாய்ந்தபடி அவன் நிற்க மேடையிலே சோகப்பாடலுக்கு பாடலுக்கு ஒருவர் அபிநயம் பிடித்தார் பாடல் முடியவும் திரை மூடப்பட்டது அப்சுக்கான திரை மேலிருந்து திறக்கப்பட்டது
ஆம் அப்ஸ் அமைதிபெற்றுவிட்டான்.
முற்றும்.
,

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக