கலிங்கத்துப் பரணிக்கு ஒரு முடிசூட்டு
நீலம் பொழி பரல்
நெய்தலாள் தாலாட்டில்
தையலவள் மடியினிலே
கண்ணயர்ந்தனன் காளை
கைவேல் கொண்டார்
வந்தார் வாவென்றார்
துடித்தெழுந்தே தொடர்ந்தனன்
பகையொன்று புகைகிறது
ஊதித்தள்ள குழலெடுங்கள்
செப்பினான் சீலன்
சங்கு முழக்கி
புரவிகள் பறக்க
போர் போர்
எங்கும் புழுதி
இரத்தப்புழுதி
ஏந்து மாகரங்கள்
இன்னல் துடைக்க
தாங்கு மாபூமி
சடலங்கள் ஏந்த
ஆங்கோர் நிலத்தில்
அழுகல் பொழுதில்
வீழ்ந்தனன் வாள்வீரன்
தரைமகள் தன்
கொழுநன் உடலம்
தன்னை தாங்காது
தன்னுடலால் தாங்கி
விண்ணாட்டு அரைமகிளிர்
அவ்வுடலை புணராமுன்னம்
ஆவியொக்குவாள் பார்மின் பார்மின்
ம.இரமேசு
நீலம் பொழி பரல்
நெய்தலாள் தாலாட்டில்
தையலவள் மடியினிலே
கண்ணயர்ந்தனன் காளை
கைவேல் கொண்டார்
வந்தார் வாவென்றார்
துடித்தெழுந்தே தொடர்ந்தனன்
பகையொன்று புகைகிறது
ஊதித்தள்ள குழலெடுங்கள்
செப்பினான் சீலன்
சங்கு முழக்கி
புரவிகள் பறக்க
போர் போர்
எங்கும் புழுதி
இரத்தப்புழுதி
ஏந்து மாகரங்கள்
இன்னல் துடைக்க
தாங்கு மாபூமி
சடலங்கள் ஏந்த
ஆங்கோர் நிலத்தில்
அழுகல் பொழுதில்
வீழ்ந்தனன் வாள்வீரன்
தரைமகள் தன்
கொழுநன் உடலம்
தன்னை தாங்காது
தன்னுடலால் தாங்கி
விண்ணாட்டு அரைமகிளிர்
அவ்வுடலை புணராமுன்னம்
ஆவியொக்குவாள் பார்மின் பார்மின்
ம.இரமேசு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக