ஞாயிறு, 21 செப்டம்பர், 2014

அன்பு  யோகண்ணா   உண்மைதான்   சிலவற்றை  நான் சொல்லாமல்  இருந்தால்  எனது  பக்கம் தெரியாமற் போய்விடும்  ஆதலினால்  மொழிகின்றேன்  -  காலம்  தரும்  சூழ்நிலைகள் ஆட்களின்  உண்மைச்  சொரூபத்தை  காட்டித்தருகிறது  ஒருவரை  17  ஆண்டுகள்   இறுக்கமாகப்  பழகியபின்  ஒரு  அற்ப  விடயத்தில்  கண்டேன்  நச்சு  அரவமென்று என்னுடன் பழகிய  காலத்தில்  அந்த உயிர்  வெளி நகரில் வாழ்ந்தது  பின்பு  நான் வசிக்கும் நகருக்கு வந்தபின்னர்  அவரின்  இல்லத்துக்கு சென்ற போது  ஒரு சில  வார்த்தைகளில்  நஞ்சைக்   கக்கியது  நான் எதுவித தர்க்கங்களுக்கும்  வன்முறைகளுக்கும் செல்வதில்லை  பிடிக்கவில்லை என்றால் ஒதுங்கிவிடுவேன்  - பொது  இடங்களில் கண்டு  தலையசைத்தால்  நானும் மகிழ்வுடன் தலையசைப்பேன்  இன்று  அந்த  உயிர் தன்னை மாற்றியிருக்கலாம்  அதை வரவேற்கின்றேன் -  அன்புக்கும்  நட்புக்கும் உபசரிப்புக்கும் என்னை மறந்து  செலவு செய்யும் குணமுள்ளவன்  (இழிச்சவாயன்)  யாராவது சிரித்து இனிக்கப்  பேசிவிட்டால்  100 வீதம் உண்மை என்று நம்பி அந்நபரை  நெஞ்சில் வைத்துப்   பூசிப்பவன்  தலையில் தூக்கி வைப்பேன்  இப்படி  தலையில்  வைத்த சிலதுகள் காலில்  அணியவேண்டியவை என்று பின்னர் சந்தர்ப்ப சூழல்  காட்டிற்று சிந்தனை  சரியாக இருந்தாலே  உயர்திணை  இல்லை  அகிறினை  என்னை  நல்லபடி தங்கள்  களிப்புக்கு  பயன்படுத்தியுள்ளார்கள்  என்பதை இன்றே  உணர்கின்றேன்  இனியும்  என்னை ஏமாற்றல்  கடினம்  மரியாதைக்காகவே  அதீதமாக  நடந்தேன்   அதை  அவர்கள்  லூசு என்று  எடுத்துக்கொண்டார்கள்  நன்றி  மறந்தார்கள்  நஞ்சைக்   கக்கினார்கள்  வெளியார் மட்டுமில்லை உறவினர்களுக்குள்ளும்  நரிகளுண்டு  - இப்பொழுது  முகநூல் நட்பு  மட்டுமே பண்பானவர்களுடன்  வீட்டுக்கு  டெனிஸ்  நண்பர்கள் தவிர  வேறு  ஒருவரும்  வருவதில்லை  கண்ணதாசன்  தேடிய நிம்மதியுடன்  வாழ்கின்றேன்  ஒருவர் மீதும் பேதமில்லை  கோபமில்லை  நெஞ்சில்  அவ்வப்போது  நஞ்சுகள்  செய்த வஞ்சனை  சற்று  இடிக்கும்  அவ்வளவே எனக்கு  இரகசியம்  பிடிப்பதில்லை  எல்லாம் வெளிப்படை   இதை  இங்கு பல  நண்பர்கள் அறிய எழுதுவதில்  என்னிடம்  இருட்டு இல்லை  வெளிச்சமே - இதற்குமேல்  இந்த  ஏழை என்ன சொல்வது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக