திங்கள், 8 செப்டம்பர், 2014



 
 
வட்ட  மேசை  உரையாடல்  
(பெயர்கள்  கற்பனையே  யாரையும்  சுட்டுவது நோக்கன்று)
 
வணக்கம்  வாங்கோ    உட்காருங்கோ 
 
சியானி -  உங்களுக்கு  என்ன  படிக்க  பிடிக்கும் ?
எனக்கு  விஞ்ஞான  கட்டுரைகள்  சினிமா  பிடிக்கும் 
 
விதுஸ்  - உங்களுக்கு ?
எனக்கு  கம்பியூற்றர் , சினிமா, கிரைம்  வாசிக்க  பிடிக்கும் 
 
நேதி - நீங்கள்  சொல்லுங்கோ  உங்களுக்கு  என்ன  படிக்க பிடிக்கும் ?
எனக்கு  பயணக்கட்டுரைகள் , நினைவுகள்,  சினிமா, வரலாறுகள் 
 
மயில் ஐயாவுக்கு  என்னய்யா  பிடிக்கும்-  நான்  அந்தக் காலத்தில 
கல்கி சாண்டில்யன்  சினிமா  பாரதம்  ராமாயணம் , சிலப்பதிகாரம் 
விரும்பி  படிச்சனான்  இப்ப  பார்வை  குறைவு  இருந்து வாசிக்க 
முடியிறதில்ல  சுகிசிவம் , நெல்லை  கண்ணன் , ஞானசம்பந்தம்,
தமிழருவி  மணியன்  பாப்பையா  பேச்சுகளைத்தான்  இப்ப 
கேக்கிறனான்  
 
மீனாட்சியம்மா   நீங்கள்  சொல்லுங்கோ 
எனக்கு  திருக்குறளும்  ஔவையின்ர  அறநூலுந்தான் பிடிக்கும் 
 
மீனாட்சியம்மா -  பிள்ளை  சியானி உங்களுக்கு  சமைக்க  தெரியுமே 
சி -  கொஞ்சம்  கொஞ்சம்  தெரியும் 
 
மீ  - நேதி  உங்களுக்கு  சமைக்க  தெரியுமே 
பெரிசா தெரியாது ஆனால் நல்லா  சாப்பிடுவன்  அதிலும்  கணவாய் கறி  மை  பேவரேட் 
 
மீனாட்சி  - என்ன  மை  பிடிக்குமோ < எல்லோரும் சிரிக்கிறார்கள் >
 
சியானி  - இல்லை பாட்டி  கணவாய் கறி யெண்டா  எனக்கு  ரொம்ப  இஸ்டம் 
 
மயில் - நான்  பதுளையில  வேலை  செய்யேக்கை  நானே 
சமைச்சு  சாப்பிட்டனான்  , விதுசுக்கு  சமைக்க  தெரியுமே 
 
வி -  கொஞ்சம்  கொஞ்சம்  தெரியும்  பள்ளிக்கூடத்தில  பழகினனான் 
ம- அது வெள்ளைக்கார  சாப்பாடல்லோ  சோறு கறி  சமைக்க  தெரியுமோ 
வி -  அம்மா  சமைக்கேக்க  பாத்திருக்கிறன்  நானா  ஒருநாளும்  சமைக்கேல்ல 
 
நேதி  - அங்கிள்  நீங்கள்  எப்பிடி  சமைக்க  பழகினனீங்கள்   
மயில் - எல்லாம்  அக்கம் பக்கம்  சினேகிதங்களை  கேட்டுத்தான் 
 
நேதி -     வெறி குட்  அங்கிள் -    சியானி  உங்களுக்கு  சாரி பிடிக்குமா 
சியானி -  எனக்கு  மாடர்ன்  ட்ரெஸ்தான்  பிடிக்கும்  கோயிலுக்கு  மட்டும்  சாரி  கட்டுவன் 
அதுவும்  அம்மா  சொல்றதால 
 
மீனாட்சியம்மா - பிள்ளையள்   சொல்றனெண்டு  குறை நினையாதையுங்கோ 
கோயிலுக்கு  போகேக்கை  உடம்பை  மறைச்சு  சாரி கட்டுங்கோ  மற்றது 
தலைமயிரை   பரவ போடாமல்  பின்னிக்கொண்டு போங்கோ .
சொண்டுக்கு  சிவப்பெல்லாம்  அடிக்காதையுங்கோ  அது  அசிங்கம் 
மற்றவையின்ர  மனசை  கெடுக்கிற மாதிரி  பொம்பிளையள்  உடுப்பு 
போடக்கூடாது.  இது  எனக்கு என்ரை  ஆச்சி  சொன்னது  அதைத்தான் 
உங்களுக்கு சொல்றன்  கோவிக்காதையுங்கோ 
 
சியானி  - இல்லை  பாட்டி  நீங்கள்  சரியாத்தான்  சொல்றியள்  அம்மாவும் 
இதைத்தான்  சொல்றவ 
 
நேதி  - பாட்டி  உடுப்பு  போடுறது  மேக்கப்  பண்றது  அவையவையின்ர
சுதந்திரம்  இல்லையா பாட்டி 
 
மயில் -  பிள்ளை  சுதந்திரந்தான்,  அது  வீணா  உங்களுக்கு  தொல்லையை 
கொண்டு வரக்கூடாது,  நாங்கள்  தமிழாக்கள்  எங்களை  வெள்ளைக்காரரா 
நினைச்சு  நடக்கக் கூடாது  அது அவையளின்ர  முறை நீங்கள்  வெள்ளைக்காரர் 
ஆகிற தெண்டா  நல்லா  ஆகுங்கோ  ஆனால்  உங்களை  அவையள் 
எல்லா  விசயத்திலையும்  ஏற்கமாட்டின   
 
விதுஸ் -  சரியா சொன்னீங்கள்   அங்கிள்  அவையள்  எல்லா  விசயத்திலையும் 
எங்களை  ஏற்க மாட்டினம்  நான்  சின்னப்பிள்ளையில  விளையாடேக்கை 
என்னோட  சேர்ந்து  விளையாட  வரமாட்டினம்  பிறகு  கொஞ்சம்  வளர்ந்த 
பின்னாலெதான்  வந்தவை 
 
மயில் -  அதுதான்  இயற்கை  இயல்பு  -   எத்தினை  பெடியள்  ஒரு 
வெள்ளை  கேள் பிரெண்டை  பிடிக்க  அலையினம் ஒருத்தியும் 
நல்லா  பழகினாலும்  அந்த விசயத்துக்கு  ஏற்கமாட்டாள் 
 
நேதி  -  அங்கிள்  சில  பேர்  வெள்ளைக்கார  கேர்ள் பிரெண்ட் 
வைச்சிருக்கினைதானே 
 
மயில்  - பிள்ளை  உடம்பு  பெருத்து   தங்கண்டை  ஆக்கள்  தங்களை 
விரும்பேல்லை  எண்டாத்தான்  எங்கண்டை  பக்கம்  தலையை 
காட்டுவினம்  எங்கையாவது  ரெண்டு மூண்டு பேர் தான்  அழகான
வெள்ளைக்கார பிள்ளையளை  வைச்சிருக்கினை   அதுவும்  மேல் 
படிப்புகள்  படிச்சதால   இன்னும்  நிறைய  கதைக்கலாம் 
நேரமாச்சு  இன்னொருநாள்  பாப்பம்  என்ன .
 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக