இதுதான் எங்கள் வாழ்க்கை
அந்தப்பனையிலும் ஒரு அழகான குடும்பம்
உணர்வுடன் குதூகலித்து வாழந்துவந்தது
மழைக்கும் காற்றுக்கும் வெப்பத்துக்கும்
இடிக்கும் மின்னலுக்கும் அந்த ஐந்தறிவான்
வீடு அசையாமற் கம்பீரத்துடன் நின்றது
இப்படியான ஒரு தருணம் அப்பனை
தறிக்கப்பட்டது அந்தப்பறவை தன்
தத்தும் குஞ்சுகளுடன் பக்கத்து
வளவில் நின்ற மாமரத்துக்கு
அடைக்கலம் தேடிப் பறந்தது
கூடற்ற அப் பறவை கிளைகளில்
குஞ்சுகளை இருத்திவிட்டு புதிய வீடுகட்ட
பொறுக்கி வந்த குச்சிகளினால்
புது வீடு கட்டத் தொடங்கியது
சில பறவைகள் எதிர்த்தன
குஞ்சுகளை கொத்தித் தாக்கின
ஆனாலும் அந்தத் தாய் போராடி
விரட்டி வென்றது கூடும் கட்டியது
அதிகாலையில் எழுந்து பக்கத்துக்
குளத்தில் நீராடி குஞ்சுகளுடன்
கூட்டுக்கு வந்தது - குஞ்சுகள்
வேலைக்குச் செல்லும் அம்மாவிடம்
அதுவேண்டும் இதுவேண்டுமென
கோரிக்கை வைத்தன தங்கள்
மழலைக்குரலால் ஆகட்டும்
என்று சொல்லியது தாய்
இந்த உரையாடல் கீழ் வீட்டில்
வசித்த ரவிக்கு இனிமையாகவிருந்தது
அவன் தம்பி குமாருக்கோ தூங்குவதற்கு
இடையூறாகவிருந்தது அவன் எழுந்து
தன் கவணையெடுத்து கூட்டுக்குத்
தாக்கத் தொடங்கினான் கற்கள்
குண்டுமழையாகப் பொழிந்தது
குஞ்சுகள் பயந்து நடுங்கின
குமாருக்கோ தன் வீரம் கண்டு உள்ளத்தில்
கொண்டாட்டம் குஞ்சுகளுக்கோ
திண்டாட்டமாயிருந்தது
இரைதேடி மீண்ட தாய்ப்பறவை
மீண்டும் தன் கூட்டுக்கு வந்த
ஆபத்தைக்கண்டு வருந்தியது
பெரும் சிரமப்பட்டு அந்தக்
கல்மாரிக்குள்ளிருந்து குஞ்சுகளைக்
காப்பாற்றியணைத்தபடி மீண்டும்
ஒரு புதிய கூட்டைக் கட்ட அடுத்த வளவில்
நின்ற புளியமரத்துக்குப் பறந்தது
ம.இரமேசு
அந்தப்பனையிலும் ஒரு அழகான குடும்பம்
உணர்வுடன் குதூகலித்து வாழந்துவந்தது
மழைக்கும் காற்றுக்கும் வெப்பத்துக்கும்
இடிக்கும் மின்னலுக்கும் அந்த ஐந்தறிவான்
வீடு அசையாமற் கம்பீரத்துடன் நின்றது
இப்படியான ஒரு தருணம் அப்பனை
தறிக்கப்பட்டது அந்தப்பறவை தன்
தத்தும் குஞ்சுகளுடன் பக்கத்து
வளவில் நின்ற மாமரத்துக்கு
அடைக்கலம் தேடிப் பறந்தது
கூடற்ற அப் பறவை கிளைகளில்
குஞ்சுகளை இருத்திவிட்டு புதிய வீடுகட்ட
பொறுக்கி வந்த குச்சிகளினால்
புது வீடு கட்டத் தொடங்கியது
சில பறவைகள் எதிர்த்தன
குஞ்சுகளை கொத்தித் தாக்கின
ஆனாலும் அந்தத் தாய் போராடி
விரட்டி வென்றது கூடும் கட்டியது
அதிகாலையில் எழுந்து பக்கத்துக்
குளத்தில் நீராடி குஞ்சுகளுடன்
கூட்டுக்கு வந்தது - குஞ்சுகள்
வேலைக்குச் செல்லும் அம்மாவிடம்
அதுவேண்டும் இதுவேண்டுமென
கோரிக்கை வைத்தன தங்கள்
மழலைக்குரலால் ஆகட்டும்
என்று சொல்லியது தாய்
இந்த உரையாடல் கீழ் வீட்டில்
வசித்த ரவிக்கு இனிமையாகவிருந்தது
அவன் தம்பி குமாருக்கோ தூங்குவதற்கு
இடையூறாகவிருந்தது அவன் எழுந்து
தன் கவணையெடுத்து கூட்டுக்குத்
தாக்கத் தொடங்கினான் கற்கள்
குண்டுமழையாகப் பொழிந்தது
குஞ்சுகள் பயந்து நடுங்கின
குமாருக்கோ தன் வீரம் கண்டு உள்ளத்தில்
கொண்டாட்டம் குஞ்சுகளுக்கோ
திண்டாட்டமாயிருந்தது
இரைதேடி மீண்ட தாய்ப்பறவை
மீண்டும் தன் கூட்டுக்கு வந்த
ஆபத்தைக்கண்டு வருந்தியது
பெரும் சிரமப்பட்டு அந்தக்
கல்மாரிக்குள்ளிருந்து குஞ்சுகளைக்
காப்பாற்றியணைத்தபடி மீண்டும்
ஒரு புதிய கூட்டைக் கட்ட அடுத்த வளவில்
நின்ற புளியமரத்துக்குப் பறந்தது
ம.இரமேசு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக