நெஞ்சில் வஞ்சமில்லா
அந்த நெடுமரத்தின் கிளைகளிலே
குந்தி இருந்து எதையோ கொத்தி தின்றது
அந்தப்பறவை உண்ட களை
தொண்டைக்குள் நிற்க
ஓடிச்சென்று கள்ளமில்லா
குளத்தில் நீரருந்தி
மீண்டும் நின்ற இடத்துக்கே
பறந்து வந்தது அப்பறவை
அடைக்கலம் கொடுத்த
கிளையில் அசிங்கம்
செய்துவிட்டு
வேறோர் பெரிய மரத்துக்கு
பறந்து சென்றது பறவை
உண்டகோப்பையை
நன்றாகக் கழுவாதவர்கள்
காரியம் முடிந்ததும் டாட்டா
இம்மியளவும் நெஞ்சில் நன்றியில்லை
பண்பாடா அது எத்தனை காசு
சந்தியில் நின்று
உலகை மாற்றும் வாயாடிகள்
வாழ்தல் என்பதை முழுதாக
ஒரு கணமும் அறியார்
நஞ்சு தரும் நாகங்கள் என்றறிந்தும்
பசுவாகி பால்வார்ப்போர் பெருங் குணம்
பேதைகள் அறியார் .
ம.இரமேசு
அந்த நெடுமரத்தின் கிளைகளிலே
குந்தி இருந்து எதையோ கொத்தி தின்றது
அந்தப்பறவை உண்ட களை
தொண்டைக்குள் நிற்க
ஓடிச்சென்று கள்ளமில்லா
குளத்தில் நீரருந்தி
மீண்டும் நின்ற இடத்துக்கே
பறந்து வந்தது அப்பறவை
அடைக்கலம் கொடுத்த
கிளையில் அசிங்கம்
செய்துவிட்டு
வேறோர் பெரிய மரத்துக்கு
பறந்து சென்றது பறவை
உண்டகோப்பையை
நன்றாகக் கழுவாதவர்கள்
காரியம் முடிந்ததும் டாட்டா
இம்மியளவும் நெஞ்சில் நன்றியில்லை
பண்பாடா அது எத்தனை காசு
சந்தியில் நின்று
உலகை மாற்றும் வாயாடிகள்
வாழ்தல் என்பதை முழுதாக
ஒரு கணமும் அறியார்
நஞ்சு தரும் நாகங்கள் என்றறிந்தும்
பசுவாகி பால்வார்ப்போர் பெருங் குணம்
பேதைகள் அறியார் .
ம.இரமேசு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக