நம்பினால் நடராசா இல்லை எமராசா
ஒரு ஊரிலே ஒரு வசதி படைத்த சிவபக்தர் இருந்தார் அவருக்கு நிதமும் கீரை சாப்பிடவேண்டும்
அதற்காகப் பக்கத்தூரில் இருக்கும் கீரை விற்கும் பெண்ணிடம் கீரை கொண்டுவந்து தருமாறு
கேட்டுக்கொண்டார் அப்பெண்ணும் அதற்கு ஒப்புக்கொண்டார் நிதமும் ஒரு வாய்க்காலைத்
தாண்டியே அப்பெண் கீரை கொண்டு வந்து கொடுப்பது வழமை ஒரு நாள் அப்பெண் தாமதமாக
வந்தாள் அதனால் சிவபக்தர் ஆத்திரமடைந்தார் ஏன் தாமதமெனக் கடிந்துகொண்டார்.
சாமி நான் என்ன செய்வேன் வாய்க்காலில் இன்று நீரோட்டம் பெருகிவிட்டது அது தாழ்ந்ததன்
பின்னரே நடந்து வர முடிந்தது அதனாலேயே தாமதமாகிவிட்டது என்றார் அக்கீரைக்காரப்பெண்
அதை நம்ப மறுத்த சாமி வா வந்து காட்டு வாய்க்காலில் வெள்ளம் பெருக்கெடுக்கின்றதாவென்றார் , சாமி நான் வருகையில் வற்றிவிட்டது தற்போது நிலைமை தெரியவில்லை என்றார் அப்பெண்.
சாமியோ நம்ப மறுத்து அப்பெண்ணை அழைத்துக்கொண்டு வாய்க்காலுக்குச் சென்றார் சாமிக்கும்
வாய்க்காலைத் தாண்டிச் சென்று கீரை விற்கும் பெண்வாழும் ஊரில் சில காரியங்கள் ஆற்றவேண்டியிருப்பதைச் சொன்னார் இப்பொழுது வாய்க்காலில் வெள்ளப் பெருக்கம் அதிகரித்துக் கொண்டிருந்தது இருவரும் கரையில் நின்றார்கள் சாமி சொன்னார் நாளை இதுபோல் அக்கரையில்
வெள்ளமானால் நீ சிவ சிவ என்று உச்சரித்தபடி கண்களை மூடிக்கொண்டு நட நீரோட்டம் நின்று உனக்கு வழிவிடுமென்றார் சாமி சொன்னதுதான் உடனே அப்பெண் கண்களை மூடி சிவ சிவ
என்று உச்சரித்தபடி அக்கரைக்கு சென்றுவிட்டார் வெள்ளம் ஓடிக்கொண்டேயிருந்தது அப்பெண்ணை அடித்துச் செல்லவில்லை அவர் கரையேறிவிட்டார் - அங்கிருந்து கூவினார் அப்பெண் <<<< சாமி நான் கரையேறிவிட்டேன் நீங்கள் ?? நல்லது நான் நாளைவருகின்றேன் என்று சமாளித்தபடி சாமியார் கீரைசாப்பிட வீடு திரும்பினார் .

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக