செவ்வாய், 9 செப்டம்பர், 2014


கோமாளிகள்

வண்ணக் கதிரொன்று  வடிவாய்  வளரும்  வேளையிலே
கொள்ளை  மழையொன்று  குழப்பி  ஒழித்ததுவே
சின்னப்பூவெல்லாம்  சிறு நெருஞ்சி  முள்மீது சிதைந்தது போல்  
உள்ளப் பெருங்கோயில்  கள்ளர்  வசமாகி களையிழந்ததுவே 
உண்மைத்தென்றலை  உயிருள்ள  ஓவியத்தை  புல்லர்
கூட்டமொன்று  புதை குழியில்  தள்ளினரே
வெள்ளை  மனமெல்லாம்  சேறு பூசிய  சின்னவர்கள்
பிள்ளைத்தமிழின்  கழுத்தறுக்க  துடித்தனரே
சாமி சிலை செய்து  கோவில்  திறந்து வைப்பார்
வீதி வலம் வந்து  வேடிக்கை  காணச் செய்வார் 
ஏழை  உதவி கேட்டால்  உள்ளத்தை  பூட்டி வைப்பார் 
குணமில்லா  கோவேறிக்  கால்நடைகள்  தம்மை
கோபுரத்து  கலசமென்று  கடலைபோல்  பொங்குகிறார்
பொல்லாதா போக்கிரிகள் பணம் நாடும் செம்மறிகள்
குணமில்லா  கோமாளிகள்  கோமாளிகள்

ம.இரமேசு
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக