வெள்ளி, 12 செப்டம்பர், 2014



பந்தடித்த  களையுடனே
பண்பில்லா  பேதைகளுடன்
பயணிக்க  நேர்ந்தவொருநாள்
பசியும்  முற்றிய நிலவாக
பால் நிலா  காட்டிற்று
உதரத்தில்  கொட்டாவி
சுதந்திரமாய்  சிரித்தது
உதரம்  ஐயோவென்று
அழுது துடித்தது
நேரமும்  அல்குல்
ஒன்றை காட்டியது
இரவுநேர  உணவு விடுதிகள்
இல்லாத  காலம்
இன்னமும்  2 மணி  நேரம்
ஓடவேண்டும்  இருப்பிடமடைய
பொறுக்குமா  பசி ???
சின்னதொரு  நகரை 
அந்தச்   சித்திரக்கார்  கடக்க
சிறியவன் ஒருவன்  செப்பினன் 
நரகத்து வார்த்தை தனை
நிப்பாட்டு திருப்பு காரை
இஞ்சையொரு  வலசிருக்கு
போனா  சமைச்சுத்தரும் 
என்  நெஞ்சம்  நெருப்பாகியது
அந்த  நீசன்  நா   கேட்டு
நா  பொறுத்தேன் .
சென்றோம்  அந்த மனிதன்
வீட்டுக்கு,  மணியடித்தோம்  
ஒளிபிறந்தது  உள்ளே 
கதவைத் திறந்து  புன்முறுவலுடன்
வரவேற்றான்  அந்த  வான் நெஞ்சன்
எந்தவித  சலிப்பும்  முகத்திலில்லை
அகத்தின்  பரிசுத்தம்  சிரிப்பில்  கண்டேன் 
இருக்க வைத்தான்  டி  வி போட்டான் 
அரைமணி  நேரத்தில்  பெரிய 
சட்டிகளில்   சோறும்  கறியும்
சமைத்தெடுத்து   மேசையில்
வைத்தான்  அந்த  மா நெஞ்சன்
எல்லோருக்கும்  பரிமாறி 
பசியோட்டினான்  அந்தக் குட்டி எம்ஜிஆர்
நன்றி சொல்லி  காரில்  அமர்ந்தேன்
காரும்  நகர மீண்டும்  வாய் திறந்தான்  அந்தச் 
சர்ப்பம்  - சொன்னன் பாத்தியே 
வலசு  சமைச்சுத்தருமெண்டு என்றான்
இனியும்  என்னால்  பொறுக்க
முடியவில்லை,,  டேய்--------
கொஞ்சம்  யோசி  அந்தப்பெடியன்
வலசா  நீ  வலசா   - இந்த  அகால
வேளையில நித்திரையாலை
எழும்பி  கொஞ்சமும்  சலிக்காமல் 
எங்களுக்கு  சமைச்சு தந்த  அந்த
பெடியன்ர  நல்ல  குணத்துக்கு 
நீ  குடுக்கிற   பாராட்டு  உதுதானே
கொஞ்சமும்  நன்றி இல்லாமல்
பேசுறியே  ------- அன்றுடன்
அந்தச்  சிறியோன்  நட்பை
வெட்டிவிட்டேன்  .

ம.இரமேசு

  
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக