புதன், 10 செப்டம்பர், 2014

vaa vaa

நல்ல சமர்காலம்  அன்றுதான்  இலங்கையிலிருந்து  ராமுவின்  அம்மா  டென்மாக்  வரும்  நாள் முப 11:15 க்கு  பிலூண்டில்  வானூர்தி  வருகின்றது  -  பிலூண்ட்  செல்ல  ராமுவும்  மனைவியும்
மகனும் மகளும்  ஆயுத்தமாகின்றார்கள்

காட்சி 1

ராமு  -  இஞ்சேரப்பா  இண்டைக்காவது  நான்  சொல்றதை  கேளும் 
தயவு செய்து  உந்த  பதினொண்டை  கழட்டிப்போட்டு  சீலையை
கட்டும்  அம்மாவயல்லே கூட்டி வரப்போறம் 

சீதா - ஏனப்பா  இதுக்கு என்ன

ராமு -  என்னவோ  முதல் முதலா  மருமேளை  காணேக்கை  நீர்  சீலையோட  நிண்டாத்தான்
அவவுக்கு  சந்தோசமாயிருக்கும்  அவையள்  அந்தக்கால  பண்பாடான   ஆக்கள் 

சீதா  - அப்ப  எனக்கு  பண்பாடு  தெரியாது  அப்பிடித்தானே 

ராமு -  ஐயோ  கடவுளே  இப்ப  ஆர் சொன்னது  உமக்கு  பண்பாடு தெரியாதெண்டு 
ப்ளீஸ்   ரைற்று  அண்டெர்ஸ்ராண்ட்  மீ   

மாலா (மகள் ) -  ஏனிப்ப  சண்டை  பிடிக்கிறியள்

சீதா - ஒரு சண்டையுமில்ல  நீ  போய்  கெதியில  வெளிக்கிடு

ராமு -  பிள்ளை  பாட்டிய  கூப்பிடப்போரம்  ஜக்கோ ஜிக்கோ  உடுப்பெல்லாம்  போடாமல்
பஞ்சாபி  அல்லது சுடிதாரை  போட்டுக்கொண்டு  வாங்கோ 

மாலா -  சரியப்பா 

ராமு -  என்ரை   செல்லம்   நீதான்   என்ட  சொல்லை  கேக்கிற  அச்சா குட்டி

பரஸ் (மகன் ) -  அப்பா  காருக்கு  பெட்ரோல்  அடிக்கவேணும்

ராமு  -  நீங்கள் போய்  பெட்ரோலை  அடிச்சுக்கொண்டு  வாரியளே   இஞ்சையிருந்து  சரியா  10 மணிக்கு  கிளம்பவேணும்   இப்ப நேரம் 9:20

பரஸ் - சரியப்பா 

காட்சி  2

பெட்ரோல்  நிலையத்தில்  காருக்கு  பெட்ரோல்  போட்டுவிட்டு
பரஸ்  காருக்குள்  ஏறி வீடு  செல்ல  காரை  ஸ்டார்ட்  செய்கின்றார்

கார்  கண்ணாடியை  தட்டி  2பேர் 

எ - ஐசே  உம்மோட  ஒருக்கா  கதைக்கோணும்  வெளியில  வாரீரே

ப - அவசரமா  போகவேணும்  நேரமில்லை 

இ - ஏன்  நீர்  இப்ப  விளையாட  வாறேல்ல

ப - எல்லாம்  இன்னொரு நாள்  கதைப்பம்   என்றுவிட்டு 

பரஸ்  காரையோட்டி  வீடு  செல்கிறார்

எ - ஜாக்ற்றுக்குள்ளாலை  ஒரு  பியர்  போத்திலை  எடுத்து  பல்லால்  மூடியை  திறந்து
ஒரு  முறடை  குடித்துவிட்டு  இ இடம்   தூசணம்  பேசிக்கொண்டு  சொல்கின்றான்
உவனுக்கு  சாத்தவேணும்  தப்பிட்டான் 

இ - மவன்  வசமா  ஒருநாள்  சிக்குவான்  அப்ப பாப்பம்

த  பா  ச  கி  வே  இருக்கும்  புதருக்குள் நுழைகின்றார்கள்

மச்சான்  தப்பிட்டான்  ஒருநாளைக்கு  குடுப்பம்   எல்லோரும்  ஆமோதிக்கின்றார்கள்
மச்சான்  எல்லாத்திலையும்  நல்லா  கலக்குறான்  கவர்பண்ணி  போலை  எடுக்கிறான்
அப்ப நாங்கள்  அடிக்கிறேல்லையே   திட்டுகின்றார்கள் 

காட்சி 3



 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக