முருகேசுப்பாட்டா வீட்டிலினிலே
பெருநெல்லியும் கொய்யாவும்
பித்தேறிப் பிணைந்து பிரேமித்த
பிந்திய நேரத்துப் பந்தம்
பந்து பொறுக்க வந்த பெடியன்களால்
நொந்து போனது - மாவில்லாக் காற்றினிலும்
மகிழ்ந்தாடிக் கிளைகள் மாறி மாறித்
தழுவி மகிழும் மாய வேளைகள்
மாமாங்கம் , சந்தையடி வளவுக்குள்
விந்தையடிக்கும் பந்து பொந்துக்குள்ளால்
மொந்தையடித்து நந்தாகி உந்திவிடும்
அதுகண்டு மனம் நொந்துவிடும்
பந்தெடுக்கும் சாட்டில் சக்கரப்
படலை தள்ளிப் பள்ளிகொள்ளும்
பாதங்கள் பள்ளத்தில், பந்தைக்கண்டும்
காணாதது போல் கள்ளப்பாவனை
செய்தே கொய்யாவை நாடும்
குறியோர் மனம் , பதிவாக ஆடி
அசையும் அலைபோன்ற அழகுக்
கிளைதனில் நீந்தும் கொய்யாவை
ஆய்ந்து வெற்றிக்களிப்பில்
வெளியேறிப் பாதி பகிர்ந்து
மீதியுண்டது ஒரு காலம்
பெருநெல்லி வாயில் போட்டு
உருட்டி புரட்டி சுருட்டி
உண்டுவிட்டுத் தண்ணீர் குடிக்கையிலே
உயிருக்குள் ஒளிர்ந்தது ஒரு வெள்ளி
இனியோடி வருமோடி அந்நாடி
ம.இரமேசு
பெருநெல்லியும் கொய்யாவும்
பித்தேறிப் பிணைந்து பிரேமித்த
பிந்திய நேரத்துப் பந்தம்
பந்து பொறுக்க வந்த பெடியன்களால்
நொந்து போனது - மாவில்லாக் காற்றினிலும்
மகிழ்ந்தாடிக் கிளைகள் மாறி மாறித்
தழுவி மகிழும் மாய வேளைகள்
மாமாங்கம் , சந்தையடி வளவுக்குள்
விந்தையடிக்கும் பந்து பொந்துக்குள்ளால்
மொந்தையடித்து நந்தாகி உந்திவிடும்
அதுகண்டு மனம் நொந்துவிடும்
பந்தெடுக்கும் சாட்டில் சக்கரப்
படலை தள்ளிப் பள்ளிகொள்ளும்
பாதங்கள் பள்ளத்தில், பந்தைக்கண்டும்
காணாதது போல் கள்ளப்பாவனை
செய்தே கொய்யாவை நாடும்
குறியோர் மனம் , பதிவாக ஆடி
அசையும் அலைபோன்ற அழகுக்
கிளைதனில் நீந்தும் கொய்யாவை
ஆய்ந்து வெற்றிக்களிப்பில்
வெளியேறிப் பாதி பகிர்ந்து
மீதியுண்டது ஒரு காலம்
பெருநெல்லி வாயில் போட்டு
உருட்டி புரட்டி சுருட்டி
உண்டுவிட்டுத் தண்ணீர் குடிக்கையிலே
உயிருக்குள் ஒளிர்ந்தது ஒரு வெள்ளி
இனியோடி வருமோடி அந்நாடி
ம.இரமேசு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக