வெள்ளி, 12 செப்டம்பர், 2014

இந்தியாவில்  முகநூல் செயற் பாட்டை   நிறுத்துவது  சரியா

முகநூலை  சரியாக பயன்படுத்தத்  தெரியாதவர்கள்  செய்யும்  ஒழுங்கற்ற  வேலைக்கு  முகநூலை  நிறுத்துவது  சரியாகத்  தெரியவில்லை  பலர்  சரியான அலைகளில்  முகநூலை  தவழ விடுகின்றார்கள்
பண்பாடான  அணுகுமுறை  உள்ளவர்களை  நண்பர்களாக  கொள்ள வேண்டும்  கிறுக்குத்தனமாக
எழுதுவோரை நீக்கினால்  பிரச்சினை  முடிகின்றது   ம்ம் , ஹ ஹ ஹா  என்று  எழுதுவதையே  பண்பிலித்தனமாக   எண்ணுபவன் யான்  எந்த ஒரு  மாற்று கருத்தையும்  கனிவுடன் பண்பு கெடாது
இனிய  வார்த்தைகளில்  எழுதுதல்  வேண்டும்  எனக்கே  எல்லாம் தெரியும்  மற்றவர்கள்  அறிவிலிகள்
என்று  எழுத  நினைத்தால்  உறி அறுந்து  சட்டி  உடைந்ததுபோலாகிவிடும் நட்பு    படிக்கிற  பிள்ளைகள்  முகநூலுக்கு  அதிக நேரம்  எடுப்பதை  நிறுத்தவேண்டும்  .  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக