சனி, 20 செப்டம்பர், 2014


கிரோசீமா  நாகசாகிமீது  குண்டு பொழிந்தவர்கள்  கல்லாத  மடையர்களா ?? 


கூரிய நுண்ணறிவுமிக்க  பெருமகான்  வள்ளுவப்பெருந்தகை,   அவரின் 1330 குறள்களும் 
மாபெரும் செல்வம்  -  எல்லாக் குறள்களும்  நுணுக்கமாகப்   பொருள் கூறும். 
இங்கே அடியேன்  குறிப்பிடும் குறளில்  பாருங்கள்   பண்பு என்பது  நல்லவரிடமே இருக்கும்  கல்வி  கற்றவன் என்பதற்காக  அவனிடம்  பண்பை  எதிர்பார்க்க முடியாதென  மொழியும்.   வாழ்வில்
பெரும் படிப்புப்  படித்த  ஆட்களை  கண்டிருக்கின்றேன்  இவர்  படித்தவரா என  ஐயப்பட்டதுண்டு
அற்ப விடயத்துக்கெல்லாம்  ஆத்திரம் கொள்வார்கள்  அதை  பெரிய  பொருளாகச் சுமப்பார்கள் .
நற்பண்புடையோருக்கு வரும்   கோபம்   நீரில்  ஏற்பட்ட  பிளவு போன்றதாகும்  நிலைக்காது
ஆனால்  சிலர்  படித்தவர்களாக  இருந்தாலும்  கோபம்  காக்கும்  விடயத்தில்  பேதையைப்போல் 
இருப்பார்கள்  இருக்கிறார்கள் - கல்வியறிவு  இல்லாதவரிடம்  இருக்கும் பணம்  பெரும்  ஆபத்தைக்
கொண்டுவரும் என்பதை  சொல்ல வருகையில்  வள்ளுவப்பெருமான்  கற்றவர்களிடம் இருக்கும் வறுமை  என்று கூறாது நல்லவர்களுக்கு ஏற்படும் வறுமை எனக் கூறும்  குறள்  இது .

நல்லார்கண்  பட்ட  வறுமையின் இன்னாதே
 கல்லார்கண் பட்ட திரு .

அடியேன்  சிந்தித்ததுண்டு  வள்ளுவப்பெருந்தகை    ஏன்  கற்றார்கண்  பட்ட  என்று  புனையவில்லை என்று, படித்தவர்கள் எல்லோரும்  பணம் படைத்தவர்களாக  வாழ்வதில்லையே  - ஐயம் கேட்கையில்  பேராசிரியர்  பண்டிதர்  சு  சிகாமணி  விளக்கியது  படித்தவர்கள்  அனைவரும்  எப்பொழுதும்  நல்லவர்களாக  அறவழியில்  நடப்பதில்லை  நெஞ்சில்  ஈரத்துடனும்
இருப்பதில்லை , சிலர்  படித்திருந்தும்  அறவழி  நீங்கி  நாசம்  செய்பவர்களே  - கிரோசீமா  நாகசாகிமீது  குண்டு பொழிந்தவர்கள்  கல்லாத  மடையர்களா ??   - இங்கு  அடியேன் நடத்தும் அவசர உதவி  அமைப்புக்கு     படித்தவர்கள்  என்று சொல்லப்படுவோர்   சிறு தொகைகூட தந்து  உதவுவதில்லை . எவ்வளவு  ஆழமாக  வள்ளுவப்பிரான்  இயம்பியிருக்கின்றார்  பார்த்தீர்களா  அன்பு  உள்ளங்களே .

ம.இரமேசு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக