திங்கள், 29 செப்டம்பர், 2014

கண்களின் சிறுகாம்பு  கண்களைக்காக்கும்
உந்தன்  எண்ணப்பெருநெருப்பு  உன்னையழிக்கும்

கண்களின்  சிறிய இமைகள் உன்னைக் காக்கும் 
உனக்குள் இருக்கும்  ஆணவம் திமிர்  துவேசம்
நான்  எங்கே  அவன்  எங்கே  என்ற  நினைப்பின்
வெறி,  யாவும் நெருப்பாகி  உன்னையே அழிக்கும்
ஆதலால்  எல்லோரிடத்தும்  அன்பு செய்  பவ்வியமாக
நடந்துகொள்  மாற்றாரை  குறைந்தவராகக் கருதி
எள்ளி  நகைத்து  ஏளனஞ் செய்யாதே,   செய்யின்
அடுத்த பகல்  நீ  இன்னொருவரால்  காயப்படுவாய் .

ம.இரமேசு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக