புதன், 24 செப்டம்பர், 2014

மண்ணிலே  மயக்கும் 
உயிரைப் படைத்தே 
அதன் கண்ணிலே 
காந்தம்  வைத்திட்டான் 

என்னிலும் உன்னிலும் 
இரும்பைச்   சொருகி 
அந்த  நெருப்பினில் 
உருகச் செய்தான்

விண்ணிலும்  மண்ணிலும் 
பற்றுக்குப்  பிரிவானோம் 
என்பவரும்,  கன்னிப் 
பெண்ணிலே  பற்றுவைத்தார் 
பாரின் பழிக்கும்  ஆளானார்

இந்திரனும்  கொஞ்சிநான் 
நித்தியும்  கொஞ்சினான் 
கேலியும்  பழியும் கொண்டார் 
கதைகள்  பல பல 





எவராலும்  தணிக்கமுடியா 
நெருப்பாறு  ஓடிக்கொண்டே 
இருக்கின்றது  அதை 
வாய்க்கால் வெட்டி 
நல்லபடி  நர்த்துவதே 
அறிவு  இல்லை 
எல்லாம்  பொசுங்கிவிடும்

ம.இரமேசு

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக