வெள்ளி, 5 செப்டம்பர், 2014

ஒரு உயிர்  பிறந்திருக்கின்றது  அதை  வளர்த்துவிட ஒரு  அன்னையுயிர் கூடவே  இருக்கிறது -  அது  மனிதனாகலாம்  மிருகமாகலாம்  பறவையாகலாம்  வேறு  எதுவோவாகலாம்  அவ்வுயிர் சிறிதுகாலம்
பூமியில் வாழும்,  இதில் மனிதனுக்கு  மட்டுமே  சிறப்பான  சிந்திக்கும்  அறிவு  ஆற்றல் கிடைத்திருக்கின்றது  அதைப்  பெற்றும்  கல்லாமல்  சிந்தியாமல்  வாழும்  மனிதர்கள்   காட்டில் வாழும்  மிருகங்களுக்கு சமமானவர்களே,  கற்றும்  ஆசையால்  ஆணவத்தால்  பாகுபாடு  பார்த்து மற்றோரை  அடக்கி ஒடுக்கி  வாழ  நினைக்கும் மனிதனும்  அறிவற்றவனே,  காட்டு விலங்குக்கு  ஒப்பானவனே,  இல்லை  அதனிலும்  கீழானவனே.  மிருகங்கள்  தங்களுக்குள்  இன்னென்றை  அடக்கி  ஒடுக்குவதில்லை  பாகுபாடு பார்த்து  ஒதுக்குவதுமில்லை   பசிக்கு  உணவாக
வலிமையற்றதை  கொன்று புசிக்கும்  அதுமட்டுமே  மிருகத்தின்  தன்மை,  மனிதன்  தனது  அதிகாரத்தை  நிலைநாட்ட கொடிய  கருவிகளால் அடுத்த  மனிதனை  கிஞ்சித்தும் சிந்தியாது கொலை  செய்கின்றான்    நாகரிகத்தில்   வளர்ந்துவிட்டதாகச்   சொல்லிக்கொண்டு  குழந்தைகளை  குண்டெறிந்து கொல்கிறான்  பெண்களை  பலவந்தம்  செய்கின்றான்  ஒரு  மனித உடலுக்கு  செய்யக்கூடாத  கொடிய சித்திர வதைகளை இரக்கமின்றிச்  செய்கின்றான் - இன்னோர்  மண்ணிலோ  கடவுள் தந்த சட்டம்  என்று  கற்கால  வழக்கில்  வாழ்கின்றான்,  மனிதரின் கழுத்தை  அறுத்து எறிகின்றான்  குழிதோண்டி  குற்றவாளியை உள்ளே  புதைத்து  கல்லால்  எறிந்து  துடிக்க  துடிக்க  கொல்கின்றான்  இந்தச்  செய்திகளை  அறியும் போது  இரக்கமுள்ள  நெஞ்சம்  மிகுந்த  வேதனையால்  கலங்குகின்றது    இது  கொடுங் கொடுமையல்லவா  என்றால்  எனது  மதத்தை  பழிக்கின்றீர் என்கின்றார்கள்    கழுத்தை  அறுப்பதும்  குழியில்  நிற்க வைத்து  கல்லால் எறிந்து  கொல்வதும்
கடவுள் தந்த  சட்டம் அதை  வரவேற்கின்றேன்  என்று  கூறுவோரை அவர்கள் என்னதான்  திறமையுள்ளவர்களாயினும்    என்னால்  அவர்களை நட்புடன் ஏற்க முடியாது  அதனாலேயே  முக நூல் நட்பிலிருந்து அவர்களை  நீக்கி விட்டேன் -  அக் கொடுந்  தண்டனைகளை  நான்  வரவேற்கவில்லை
என்று சொல்வோரை  மதிக்கிறேன்  நட்புடன்  ஏற்கின்றேன் . ஆதியில் உலகமெங்கும்  கொடுமையான
தண்டனைகள்  இருந்தது,  தீக்குண்டில்  கைம்பெண்ணைத்  தள்ளிக்  கொல்லுதல்,  கழுவில்  ஏற்றி  கொல்லும் கொடிய  செயல்கள் யாவும்   பின்வந்த மனிதாபிமான   சிந்தனையால்  இல்லாது ஒழிக்கப்பட்டு நாடுகள்மறுமலர்வினை சுவைத்தன,  நல்ல சிந்தனையே அறிவுக்கு  ஊட்ட வேண்டிய ஊட்டம் .
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக